மும்பையில் உள்ள என்.எல். டால்மியா மேலாண்மை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(NLDIMSR) பிப்ரவரி 14, -15 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான ஹேக்கத்தான் DecodeX 2025- போட்டி நடைபெற்றது.
இதில் அமராவதி வளாகத்தின் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு முதல் பரிசைப் பெற்றது. அமராவதியின் அம்ருதா கணினிப் பள்ளியைச் சேர்ந்த பிரஜ்வாலா யட்லபள்ளி, நாயுடு யஸ்வந்த் ரெட்டி மற்றும் பாரிஸ் ஸ்ரீ வத்சல் ஆகியோர் அடங் கிய கோட் புளு குழு, PalletSense போட்டியில் ரூ.100,000 முதல் பரிசை வென்றது.
DecodeX 2025 என்பது தொழில் நுட்பம், நிதி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் நிஜ உலக வணிகப் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைக்கும் ஒரு அகில இந்திய போட்டியாகும்.
பகுப்பாய்வு, படைப்பாற்றல் மற்றும் நடைமுறைக் கல்வி பயன்பாட்டை நிரூபிக்கும் தீர்வுகளை உருவாக்கும் இப்பணி பங்கேற்பாளர்களிடம் உள்ளது.
கோட் ப்ளூ அணியின் வெற்றித் தீர்வு, பொருட்களைக் கண்காணிக்கும் துல்லியத்தை மேம்படுத்துதல், பேட்டரி நிர்வாகத்தை மேம்படுத் துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட IoT அடிப்படையிலான அமைப்பாகும்.
தொழில்துறை சவால்களை எதிர்கொள்வதில் அதன் சாத்தியக்கூறு மற்றும் செயல் திறனுக்காக இந்த அணுகுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது
அமராவதியில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை உறவுகளுக்கான மையத் தலைவர் பாஸ்கர் மல்லுபோட்லா, இம்முயற்சியானது வெற்றி, புதுமை மற்றும் நடைமுறைக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்றார்.
“எங்கள் மாணவர்கள் தாங்கள் கற்றதை தொழில்துறைக்குத் தயா ரான தீர்வுகளாக்கும் திறனை நிரூபித் துள்ளனர், இது கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அம்ருதாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இந்த வெற்றி அம்ருதா விஸ்வ வித்யாபீடத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது, இது தேசிய அளவில் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளில் அம்ருதாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.