fbpx
Homeபிற செய்திகள்கோவை பூம்புகாரில் கைவினை பொருட்கள் கண்காட்சி

கோவை பூம்புகாரில் கைவினை பொருட்கள் கண்காட்சி

கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில்தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடங்கியது.

வருகிற 31 ஆம் தேதி முடிய 26 நாட்கள் நடை பெறும் இந்த கண்காட்சியில்பல்வேறு மாநில கைவினைஞர்களின் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியின் மூலம் 10 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அனைத்து விதமான பொருள்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
மேற்கண்ட தகவலை கோவை பூம்புகார் மேலாளர் ஆனந்தன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img