முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (மார்ச் 1) 71 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரும் அவர்தம் குடும்பத்தினரும் மகிழும் விழா மட்டுமல்ல, தமிழ்நாடே மகிழும் மக்கள் விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
‘எமது மாநிலம் முதல் மாநிலமாக வேண்டும்; அதுவே எனது விருப்பம்‘’ என்று, தன்னை முன்னிலைப்படுத்தாது, நாட்டு நலனையே முன்னிலைப்படுத்திக் கொண்டவர் மு.க.ஸ்டாலின்.
அவர் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து இரவுபகல் பாராமல் மு.க.ஸ்டாலின் ஆற்றிவரும் செயற்கரிய செயல்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக நினைத்து தமிழ்நாடே இன்று கொண்டாட்டக் களமாக மாறி இருக்கிறது.
வயிற்றுக் கஞ்சிக்கே வகை தேடித்திரியும் நிலையில், எப்படி நம் குழந்தைகளைப் படிக்க வைப்பது? என்று ஏங்கிய மக்களின் மனம் குளிர மதியம் சத்துணவோடு காலைச் சிற்றுண்டியும் தந்த கல்வி வள்ளலான மு.க.ஸ்டாலினை அந்த ஏழைப்பெற்றோர் இந்நாளில் வாழ்த்துகிறார்கள்.
ஏழை மாணவிகள் உயர்கல்வியை தடையின்றிப் பெற மாதந்தோறும் ஆயிரம் ரூபாயைத் தந்து கல்லூரிக்குச் சென்று படிக்க வைத்த நம் முதலமைச்சரை அம்மாணவிகளும் பெற்றோரும் வாழ்த்துகிறார்கள்.
நாளெல்லாம் கண்ணீரும், கம்பலையுமாய் இருந்த ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு, ‘மாதாமாதம் 1000 ரூபாய் வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறதே. அந்த ஏழைத்தாய்மார்கள் உவகை பொங்கும் உள்ளத்தோடு வாழ்த்துகிறார்கள்.
இலவச பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனரே – முக மலர்ச்சியோடு அவர்கள் வாழ்த்துகிறார்கள்.
புதிய புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தங்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சரை பல்லாயிரம் இளைஞர்கள் வாயார வாழ்த்துகிறார்கள்.
தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்துறையினர், படித்தவர்கள், பாமரர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி என பல துறைகளிலும் முதலிடங்களைப் பெற்று, இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி, உழைப்பின் உருவமாக உலா வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வாழ்க, வாழ்க – பல்லாண்டு வாழ்க – நூறாண்டு காலம் வாழ்க!