fbpx
Homeபிற செய்திகள்சுற்றுச்சூழல் இயக்கத்தை மேம்படுத்தும் எச்டிபிஎப்எஸ்

சுற்றுச்சூழல் இயக்கத்தை மேம்படுத்தும் எச்டிபிஎப்எஸ்

இந்தியாவின் முன்னணி NBFC (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) நிறுவனமான HDB பினான்ஷியல் சர்வீஸஸ் (HDBFS), 2024ம் ஆண்டிற்கான கருப்பொருளான “நில மறுசீரமைப்பு, பாலை நிலமாதல் மற்றும் வறட்சியை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீள்வது” என்ற தலைப்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுகிறது. 

இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூரும் வகையிலும், எச்டிபிஎப்எஸ்-இன் 700க்கும் மேற்பட்ட பணியாளர், தன்னார்வலர்கள், இந்தியா முழுவதும் தொடர்ச்சியான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை முன்னெடுத்து நாடு தழுவிய முயற்சிக்குத் தலைமை தாங்கினர். 

இந்த முன்முயற்சிகள் தரம் குறைந்த நில சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான எச்டிபிஎப்எஸ்-இன் உறுதிப்பாட்டை வழங்குகின்றன.

இந்த ஆண்டு, HDBFS ஆனது நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் மரம் நடுதல், தூய்மைப்படுத்தும் செயல்பாடுகள், நீர் பாதுகாப்பு செயல்பாடுகள், கழிவுப்பொருட்களின் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சியை ஊக்குவிக்கும் பயிற்சிப் பட்டறைகள் ஆகியவையும் அடங்கும்.

இந்நிலையில், எச்டிபிஎப்எஸ் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது. இதில் மரம் நடுதல் உட்பட பல்வேறு முயற்சிகள் அடங்கும். 

படிக்க வேண்டும்

spot_img