கோவை மாநகரில் செயல்படும் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான வி.ஜி.எம் மருத்துவமனை இப்போது அதிநவீன செரிமான நலத்துறை சிகிச்சை வழங்குவதை தொடர்ந்து, மேம்பட்ட வசதிகள் மற்றும் புதிய சிறப்புகளுடன் கூடிய பல்துறை சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவமனையாக விரிவடைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி இரைப்பை குடல் நிபுணர்களில் ஒருவரான டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத்தால் 2009ல் கோவை சிங்காநல்லூரில் 40 படுக்கைகள் கொண்ட மையமாக துவங்கப்பட்ட விஜிஎம் மருத்துவமனை, இன்று 20 மருத்துவ சிறப்பு பிரிவுகளுடன் 150 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவ மனையாக வளர்ந்துள்ளது. NABH எனும் மருத்துவ மனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்தை தேசிய அளவில் பெற்ற முதல் செரிமான நலத்துறை சிகிச்சை மருத்துவமனை என்ற பெருமையும் 2 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு வெற்றி கரமான சிகிச்சை வழங்கிய பெருமையும் இம்மருத் துவமனைக்கு உள்ளது. இதில் 50% பேர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கல்லீரல் நல குறைபாடுதான் வந்து சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செரிமான நலத்து றை சிகிச்சையில் மக்களுக்கு மகத்தான மருத்துவ சேவைகளை 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக வழங்கியதை அடுத்து இப்போது விஜிஎம் மருத்துவமனை அதன் வளாகத்தில் 6 தளங்கள் கொண்ட கல்லீரல் மற்றும் சிறுநீரக சிகிச்சைக்கான கட்டிடத்தை கட்டி அதில் சிறப்பான மருத்துவ சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது.
மருத்துவமனையின் விரிவாக்கம் குறித்த செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்றது. விஜிஎம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறியதாவது:
இந்த விரிவாக்கம் என்பது விஜிஎம் மருத்துவமனை வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக பார்ப்பதாக கூறிய அவர், எப்படி செரிமான நலத்துறை சிகிச்சையில் பிரிவில் மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை இம்மருத்துவமனை வழங்கியதோ அதேபோல இந்த புது சிறப்பு பிரிவுகளில் வழங்கப்படும் சேவைகள் என்பது இருக்கும்.
எங்கள் மருத்துவ மனை யின் சிறப்பு சிகிச்சைகள் மேல் நன்மதிப்பு கொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த விரிவாக்கத்தை செய்ததன் மூலம் நாங்கள் வழங்கவுள்ள சிகிச்சைகளால் செரிமான நலத்துறை சிகிச்சை பிரிவை கடந்து, பிற சிகிச்சைகளை எங்களால் வழங்க முடியும்.
இந்த புது கட்டிடத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிநவீன இருதயவியல் கேத் லேப், ஒரு பிரத்யேக கல்லீரல் ICU, ஒரு டயாலிசிஸ் பிரிவு, கதிரியக்கவியல் சேவை பிரிவு மற்றும் பிரத்யேக உள்நோயாளி அறைகள் போன்ற வசதிகள் அடங்கும்.
இதன் திறப்பு வரும் மார்ச் 16 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்வில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர் சஹாய் மீனா, தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜி.பிரகாஷ், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.வீரராகவ ராவ், மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் மித்ரா பிரசாத் கலந்து கொண்டு இந்தியாவில் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்தார்.
மேலும் இம்மருத்து வமனையின் எண்டோஸ் கோப்பி துறை இயக்குனர் களான டாக்டர் மதுரா பிரசாத் சுமன் மற்றும் டாக்டர் வம்சி மூர்த்தி ஆகியோர், உடல் பருமன் தொடர்பான சிகிச்சை குறித்து எடுத்துரைத்தனர்.