fbpx
Homeபிற செய்திகள்ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் 15வது பட்டமளிப்பு விழா

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் 15வது பட்டமளிப்பு விழா

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ்-ன் 15வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 1600 மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றனர்.
இதில் நோபல் பரிசு வென்றவரான சர் ஆன்ட்ரே கான்ஸ்டான்டின் கெய்ம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளர்களான பத்மபூஷன் நம்பி நாராயணன் மற்றும் இஸ்ரோ – சந்திராயன் 3 செயல்திட்ட இயக்குநர் டாக்டர்.பி.வீரமுத்துவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். HITS-ன் வேந்தர் டாக்டர். ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் தலைமை வகித்தார்.

சிறந்த ஆராய்ச்சிக்கான நிறுவனர் தலைவர் டாக்டர் கே.சி.ஜி. வர்கீஸ் விருது, CSE துறையில் Ph.D. ஸ்காலரான ஷிஜு ராவுத்தருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கல்விசார் தேர்ச்சிக்கான டாக்டர் எலிசபெத் வர்கீஸ் (நிறுவனர் – வேந்தர்) விருது தேவாஷிஷ் சர்மா மெகாட் ரானிக்ஸ் என்பவருக்கும் மற்றும் சிறந்த மாணாக்கருக்கான பல்கலை வேந்தர் விருது பிரியங்கா மிஷல் மைக்கேல் என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டன.
HITS-ன் வேந்தரும், ஹிந்துஸ்தான் குழும நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், தேர்ச்சி பெற்று செல்லும் பட்டதாரிகளின் சாதனைகளை மனமார பாராட்டி வாழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img