fbpx
Homeபிற செய்திகள்தென் மண்டல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி துவக்கம்

தென் மண்டல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி துவக்கம்

கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக தென் மண்டல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டரங்கில் துவங்கியது.


தென்னிந்தியாவில் அமைந்துள்ள 25 ஆராய்ச்சி நிறுவனங்கள் தவிர, டெல்லியில் உள்ள ICAR-IARI மற்றும் மும்பையில் உள்ள ICAR-CIFE ஆகியவை இப்போட் டிகளில் பங்கேற்கின்றன.

போட்டிகளை துவக்கி வைத்து பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஹரிஹரன், போட்டிகளை தொடர்ந்து நடத்தி வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தினை பாராட்டினார்.

திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் செல்வராஜன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமானது இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவதால் ஆரோக்கியமாகவும், உற்பத்தித் திறன் மிகுந்தும் இருப்பார்கள் என்று கூறினார்.

முன்னதாக, கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத் தின் இயக்குநர் கோவி ந்தராஜ், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமானது வேளாண் ஆராய்ச்சி, வேளாண் கல்வி மற்றும் வேளாண் விரிவாக்கம் தவிர, உடல் திறனை மேம்படுத்தும் விளையாட்டுகளையும் பெருமளவில் ஊக்குவிக்கிறது என்றார் .

நிறைவாக முதன்மை விஞ்ஞானி முனைவர் பழனிசாமி நன்றி உரையாற்றினார். போட்டிகள் வரும் 11ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img