fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 174 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 174 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.10.2024 அன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி முகாமில் பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று (21ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இணைய வழி மருத்துவ சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்திற்கொண்டு அரசு பலவகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றான உரிமைகள் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட 2324 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 03.10.2024 முதல் 30.11.2024 வரையில் அந்தந்த தாலுக்கா அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் சிறப்பு மருத்தவ குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் உரிமைகள் திட்டத்தின் கீழ் அந்தந்த தாலுக்கா அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு UDID இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடும் முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி, 03.10.2024 அரசு மருத்துவமனை, தண்டராம்பட்டிலும், 05.10.2024 அரசு மருத்துவமனை போளுரிலும், 08.10.2024 அரசு மருத்துவமனை கலசப்பாக்கத்திலும், 10.10.2024 அரசு மருத்துவமனை தானிப்பாடியிலும், 15.10.2024, 17.10.2024 அரசு மருத்துவமனை வந்தவாசியிலு மற்றும் 19.10.2024, அரசு மருத்துவமனை வெம்பாக்கத்திலும் நடைபெற்று முடிந்த 7 முகாம்களில் 343 நபர்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் 174 நபர்கள் புதிதாக மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டு UDID அடையாள அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நபர்களுக்கு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இணைய வழி மருத்துவ சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில் குமாரி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img