fbpx
Homeபிற செய்திகள்ஜிஎஸ்டி போர்ட்டலில் வரி செலுத்துதல் வசதியை தொடங்கிய ஐடிஎஃப்சி

ஜிஎஸ்டி போர்ட்டலில் வரி செலுத்துதல் வசதியை தொடங்கிய ஐடிஎஃப்சி

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போர்ட்டலுடன் அதன் ஒருங்கிணைப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

இதன் மூலம் ஜிஎஸ்டி பணம் செலுத்தல்களை எளிதாக செய்யமுடியும். உள்ளுணர்வு மிக்க, சிரமமற்ற பேமெண்ட் அனுபவம் மற்றும் பேமெண்ட் செலுத்தியதற்கு உடனடி உறுதிப்படுத்தல்கள் ஆகிய சிறப்பம்சங்களினால் வாடிக்கையாளர்கள் இப்போது பயனடைவார்கள்.

நாடெங்கிலும் உள்ள கிளை வலையமைப்புகள் உட்பட பல்வேறு டிஜிட்டல் சேனல்கள் மூலம் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி தொகையை செலுத்த இந்த புதிய ஒருங்கிணைப்பானது அனுமதிக்கிறது.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் ரீடெய்ல் லயபிலிட்டிஸ் மற்றும் கிளை வங்கி சேவை
துறையின் தலைவர் சின்மய் தோப்லே கூறுகையில், “விரைவான, எளிமையான மற்றும் திறமையான வரி செலுத்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் ஆன்லைன் மற்றும் கிளைகள் மூலம் எளிதாக ஜிஎஸ்டி தொகையை செலுத்த இந்த வசதியைப் பயன்படுத்த எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img