fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டத் தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் போதிக்கும் ஆசிரியர்க ளுக்கான ஒரு நாள் பணியிடைப் பயிற்சி முகாம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனை மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) சிதம்பரநாதன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் பால்கனி அனைவரையும் வரவேற்றார். முகாமில் பயிற்சியாளராக முத்துசாமி (தமிழாசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடையநல்லூர்), க.சிவசுப் பிரமணியன் (தமிழாசிரியர், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, செங் கோட்டை) மற்றும் ஐயப்பன் (தமிழாசிரியர், ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி) ஆகியோர் பற் கேற்று ஆசிரியர்களுக்கு வினாதாள் வடிவமைப்பு, செய்யுள் கற்பித்தல், கற்றல் கற்பித்தலில் துணை கருவிகளின் பயன்பாடு மற்றும் வினாக்கள் தயாரித்தல் ஆகிய தலைப் புகளில் பயிற்சியளித்தனர்.

இப்பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத் தில் 95 தனியார் பள்ளிகளிலிருந்து தமிழா சிரியர்கள், கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமினை கு.மீனாகுமாரி (முதல் வர், ஸ்ரீ காமாக்ஷி வித் யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி) மற்றும் இரா.செல்வ வைணவி (முதல்வர், காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச் செந்தூர்) ஆகியோர் ஒருங் கிணைந்து நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img