fbpx
Homeபிற செய்திகள்10 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வூதியத் தொகை உயர்வு திண்டுக்கல் முதியோர் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

10 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வூதியத் தொகை உயர்வு திண்டுக்கல் முதியோர் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழக மக்களின் நலனுக்கான எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைத்திட வேண்டும் என்பதற்காகவும், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று சொல்லக்கூடிய பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசாக, வழிநடத்தி கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு, சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நல்வாய்ப்புகளையும், உதவிகளையும் வழங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தேசிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி கைம்பெண்கள் ஓய்வூதியத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதியத்திட்டம், கணவனால் கைவிடப்பட்டோருக்கான ஓய்வூதியத்திட்டம், 50 வயதிற்கு மிகாமல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடிய மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 30.55 லட்சம் பயனாளிகள் இந்த மாதாந்திர ஓய்வூதியங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். பல்வேறு காலக்கட்டங்களில் ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1000 மாத ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்துக்கு தனியாக துறையை உருவாக்கி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தினார்.

கடந்த 10 வருடங்களாக முதியோர்களுக்கு உயர்த்தப்படாமல் இருந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகையான 1000 ரூபாயை 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் (கிழக்கு) வட்டத்தில் 8,874, திண்டுக்கல் (மேற்கு) வட்டத்தில் 13,133, ஆத்து£ர் வட்டத்தில் 10,997, நிலக்கோட்டை வட்டத்தில் 16,880, நத்தம் வட்டத்தில் 5,036, பழனி வட்டத்தில் 9,152, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 10,537, வேடசந்து£ர் வட்டத்தில் 5,566, குஜிலியம்பாறை வட்டத்தில் 3,256, கொடைக்கானல் வட்டத்தில் 4,767, என மொத்தம் 88,198 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த ஓய்வூதியம் உயர்வினால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
‘மிகவும் உதவுகிறது’ திண்டுக்கல் மாவட்டம், அடியனு£த்து, நாகல்நகர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மனைவி மாரியம்மாள் (வயது 75) தெரிவித்ததாவது:
கணவர் இறந்த பின்னர் நானும், மகளும் வசித்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை, குடும்பச் செலவு என அனைத்தையும் பராமரித்து வருகிறேன்.

நான் முதியோர் உதவித்தொகை பெற்று வருகிறேன். உதவித்தொகை இந்த மாதம் முதல் ரூ.1200 உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த தொகை குடும்பச் செலவுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.
‘அனைவரும் பயன்பெறனும்’ திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம், அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்த சேதுராவுத்தர் (வயது 80) தெரிவித்ததாவது:

மனைவியுடன் வசித்து வருகிறேன். வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லை. முதியோர் உதவித்தொகை ரூ.1000 பெற்று வருகிறேன்.

தற்போது முதியோர் உதவித்தொகையை ரூ.1200-ஆக உயர்த்தி வழங்க முதல்வர் அறிவித்தபின், இந்த மாதத்திலிருந்து பெற்று வருகிறேன். இது ரொம்ப மனநிறைவாக இருக்கிறது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்குவதால் முதியோர்கள் பயனடைவர். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறணும் மகிழ்ச்சியா இருக்கணும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றி என்றார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு, பல்வேறு திட்டத்தினை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் சிரமமின்றி வாழ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

தொகுப்பு:
அ.கொ.நாகராஜபூபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img