கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக பிளாஸ்டிக் பார் பியூச்சர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இயற்கை கல்வியாளர், துருவம் அறக்கட்டளையின் இணை இயக்குனர் தீபா கலந்து கொண்டு பேசினார். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், தனிமனிதனாக ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய கடமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்வினை கல்லூரி முதல்வர் முனைவர் கற்பகம் துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோதினி ஏற்பாடு செய்திருந்தார்.