இந்திய ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் ஈரோட்டில் மார்ச் 22ஆம் தேதி (நாளை) வாங்குவோர் விருப்பம் வணிக சந்திப்பாக ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சியை நடத்துகின்றன.
இதுதொடர்பாக கண்காட்சி ஏற்பட்டாளர்கள் அஜய்ஷா, சுந்தர்ராஜ், பாலாஜி, தண்டாயுதபாணி, பி.டி.முரளிதரன் ஆகியோர் கூறியதாவது:
கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தங்கள் கண்டுபிடிப்புகளையும் உற்பத்தியையும் காட்சிப்படுத்துகின்றன.
தொழில் நிறுவனங்கள் பங்கேற்று நேரடியாக பயன்பெறவும் உற்பத்தியாளர்களுடன் புதிய பொருட்களை அறியவும் வணிகத்தை வலுப்படுத்தவும் இக்கண்காட்சி உதவும்.
கண்காட்சியை பல்லவா குழுமத்தின் தலைவர் வி.எஸ்.பழனிசாமி துவக்கி வைக்கிறார். ஏஜிடி மில்ஸ் செயல் இயக்குனர் மற்றும் இந்திய செயற்கை இழை உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ் நடராஜன் முன்னிலை வைக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.