சென்னையின் முதன்மையான ஷாப்பிங் மால்களில் ஒன்றான எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், 5 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை குஷிப்படுத்தும் விதமாக ‘லெகோ’ குளிர்கால கிறிஸ்துமஸ் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானம் வரும் 25ம் தேதி வரை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இந்த விளையாட்டு மைதானத்தை நடிகை சினேகா பிரசன்னா திறந்து வைத்தார். இங்கு குழந்தைகளை மகிழ்விக்கும் அனைத்து விதமான விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் முதன் முறையாக, எக்ஸ் பிரஸ் அவென்யூ முற்றிலும் லெகோ செங்கற்களால் செய்யப்பட்ட பிரத்யேக 22 அடி கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் லெகோவின் தயாரிப்புகளைக் கொண்டு குழந்தைகள் விடுமுறை கால அலங்காரத்தில் ஈடுபடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இது குறித்து எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் தலைமை நிதி அதிகாரி சுமதி மோகன் கூறுகையில், “இந்த புதுமையான மற்றும் மாயாஜால அனுபவத்தை சென்னைக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்“ என்றார்.