fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடிசியா வளாகத்தில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திர கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திர கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில்  இன்டெக் 2024 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி  குறித்து கொடிசியா தலைவர் திருஞானம், இன்டெக் சேர்மன் ராமசந்திரன், கொடிசியா செயலாளர் சசிகுமார், இன்டெக் உதவி தலைவர் பொன்னுசாமி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

“தொழில் கண்காட்சி வருகிற ஜீன் 6ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும். இந்த கண்காட்சியை டி.வி.எஸ்.சப்ளை செயின் சொலுசன்ஸ் நிர்வாக இயக்குனர் தினேஷ், சி.எல்.எல் தெற்கு மண்டல தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். இந்த கண்காட்சியில் 495 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, அமெரிக்கா என பல நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் அரங்குகள் பங்கேற்கின்றன இந்த கண்காட்சி மூலம் ரூ.800 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img