fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு மாநில கருத்தரங்கு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு மாநில கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவனம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும் இணைந்து மாநில அளவிலான INTENSICARE-2024 கருத்தரங்கினை மருத்துவமனை வளாகத்தில் நடத்தினர்.

துவக்க விழாவின் சிறப்பு விருந்தினரான நரம்பியல் அறுவை சிகிச்சை உயர் ஆலோசகர் மற்றும் துறை தலைவருமான டாக்டர் ஆர். முரளி  குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகர் மற்றும் மயக்க மருந்தியல் துறை மருத்துவருமான டாக்டர் பி. ரவிசங்கர் விழாவின் கருப்பொருளை வெளியிட்டார்.

இக்கருத்தரங்கானது தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு தலைவராக தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.பி. ராம்குமார் மற்றும்

ஒருங்கிணைப்பு செயலாளராக இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவன முதல்வர்

டாக்டர் பி.சத்யா ஆகியோரால் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த கருத்தரங்கால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவனங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட தொழில்நுட்பவியலாளர்கள்,  மாணவர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் பயனடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img