கோவை பூசகோ கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தாவரவியல், விலங்கியல் மற்றும் உயிரி தொழில் நுட்பவியல் ஆகியவை இணைந்து, நடத்திய ஆன்ட்டிமைக்ரோபியல் எதிர்ப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று (4 – ந் தேதி) தொடங்கியது.
நாளை (5 -ந் தேதி) முடிய நடைபெறும் இந்த மாநாட்டில் தொடக்க விழாவில்கலந்து கொண்டவர்களை பூசகோ முதல்வர் டாக்டர் பி. மீனா வரவேற்றார். செயலாளர் டாக்டர் என். யசோதா தேவி தொடக்க உரை நிகழ்த்தினார்.
ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலகம் வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடியுடன் போராடுகிறது. இந்த அவசர உலகளாவிய சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், பூசகோ கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கூடினார்கள்
இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இதில் சுகாதாரம், மருந்துகள், சுற்றுச்சூழல், உணவு மற்றும் வேளாண்மை, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங் கேற்றனர். புகழ்பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கிவிஸி பற்றிய புதிய ஆய்வுகள், புதிய சிகிச்சை அணுகுமுறைகள், நோயறிதல் மற்றும் தடுப்புநடவடிக்கைகளை அறிமுகம் செய்தனர்.
இந்த மாநாடு துறையில் சமீபத்திய முன்னேற்றங்களைக் காட்சிப்படுத் தியது. மேலும் ஆண்டிமைக் ரோபியல் எதிர்ப்பால் அதிகரித்துவரும் அச்சுறுத் தலை எதிர்த்து ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ஆராய்ச்சி அறிவைப் பகிர்ந்துகொள்வது மற்றும் ஏஎம்ஆர், தடுப்பதற்கான உத்திகளை உருவாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறித்து இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப் பின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவ தற்குத் தேவையான ஒழுங்கு முறை கட்டமைப்புகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பொது விழிப்புணர்வு உறுப்பினர்களால் உரு வாக்கப்பட்ட பிரச்சாரங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப்மெடிக்கல் சயின்ஸ் அண்ட்ரிசர்ச், திருநெல்வேலி ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வயநாடு டாக்டர் மூப்பன்ஸ் மருத்து வக்கல்லூரி, சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி, சூப்பர்ஹீரோஸ் எகண்ட் சூப்பர்பக்ஸ், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகியவற்றுடன் ஆப்பரண்ட் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தமாநாடு ஏம்ஆர் இன் உயிரின் அறிவியல் மையத்தைச் சேர்ந்த மாணவர் தூதர்கள் பல விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்து பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை நடத்தி கடந்த பன்னிரெண்டு மாதங்களில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மாணவர் தூதர்கள் இந்த இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கிவிஸி-ஐ எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான மக்களைக் கொண்டு வருவதற்கும் உறுதியளித்துள்ளனர்.
20 கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 350 பங்கேற்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.