fbpx
Homeபிற செய்திகள்உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

சேலம் அகில் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் நடத்தும் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார்.
மகளிர் அமைப்பு செயலாளர் ஒய்.காயத்ரி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துணை அலுவலர் திருமூர்த்தி, சேலம் மாவ ட்ட மக்கள் குறைதீர் அலு வலர் எம்.காந்திமதி, சேலம் தெற்கு ஒன்றியம் திமுக துணை அமைப்பாளர் பி.ஆனந்த், தமிழக அரசு விருது பெற்ற கல்வியாளர் மற்றும் பயிற்சியாளர் ஏ.எஸ்.இளையராஜா, தமிழன் டி.வி.புகழ் பாடகர் வி.முருகானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளுக்கு அரசு அலுவலர்களுடன் கலந்தாலோசனைகளும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகில் சங்க பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மகளிர் அமைப்பு தலைவி எம்.ரேணுகா நன்றியுரை யாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img