fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச காற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி

சர்வதேச காற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி

இந்தியாவின் முதன் மையான காற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான ‘விண்டர்ஜி இந்தியா 2024’, சென்னை வர்த்தக மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாடு, நுண்ணறிவுள்ள விவா தங்கள், அதிநவீன தொழில்நுட்ப காட்சிகள் மற்றும் மூலோபாய ஒத்து ழைப்பு வாய்ப்புகளின் தொ டக்கத்தை அறிவிக்கிறது.

இந்நிகழ்வானது 20க் கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கண் காட்சியாளர்களை ஈர்த்துள்ளது.
இந்திய காற்று விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம் (IWTMA) மற்றும் பி.டி.ஏ வென் ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விண்டர்ஜி இந்தியா 2024 ஆனது இந்திய மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய அரசின் மின்வாரிய கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின், தமிழக அரசின் எரிசக்தித்துறையின் முதன் மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன், மத்திய அரசின் மின்வாரிய இணைச் செயலாளர் லலித் போஹ்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

‘விண்டர்ஜி இந்தியா 2024’-ல் டென்மார்க் மற்றும் ஸ்பெயினில் இருந்து சர்வதேச அரங்குகள் இடம் பெற்றிருக்கிறது. இது காற்றாலை எரிசக்தித் துறையை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் ஒத்து¬ ழப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

படிக்க வேண்டும்

spot_img