fbpx
Homeபிற செய்திகள்ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் கொடியேற்றம் - சங்கத்தின் பெயர் பதாகை திறப்பு நிகழ்ச்சி

ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் கொடியேற்றம் – சங்கத்தின் பெயர் பதாகை திறப்பு நிகழ்ச்சி

அரசு விரைவு போக்குவரத்து சங்கத்தின் சார்பில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் கொடியேற்றுதல் சங்கத்தின் பெயர் பதாகை திறப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி பணிமனை யின் தலைவர் கந்தப்பன் பொருளாளர் தங்கவேல் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொழிற்சங்கத்தில் மாநிலச் செயலாளர் ராஜ் கொடி ஏற்றினார். காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர்கள் ராஜன், சின்ன காளை, மிக்கேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, மத்திய சங்க துணைச் செயலாளர் ஆனந்தன் சிடிசி மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, குமார முருகேசன், வார்டு தலைவர் மகாலிங்கம் காரைக்குடி பனிமலை செயலாளர் பழனிசாமி மற்றும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

படிக்க வேண்டும்

spot_img