கிருஷ்ணகிரியில் ஜாக்டோ – ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பாஸ்கரன், தங்கதுரை, மாதப்பன், கிருஷ்ணமூர்த்தி, மாரப்பன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். முது நிலை ஆசிரியர் சங்க அமைப்புச் செயலாளர் நாராயணன், நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சேகர், வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சக்திவேல், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகர், ஆசிரியர் கூட் டணி ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சரவணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சரவணன், பட்டதாரி ஆசிரியர் கழகம் விஜயன், ஆசிரியர் கூட்டணி கணே சன், கூட்டுறவுத்துறை கோவிந்தராஜ், சத்துணவு ஊழியர் சங்கம் மணி, சாலைப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் தேவன்,இடைநிலை ஆசி ரியர் சங்கம் ராமச்சந்திரன், பொது சுகாதாரத் துறை தினேஷ் ஆகியோர் கண் டன உரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன் நிறை வுரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு உடனடியாக அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், பல்வேறு துறைக ளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.