fbpx
Homeபிற செய்திகள்ஜமாத்துல் உலமா சபை சார்பில் வக்பு திருத்தத் சட்ட மசோதாவை கண்டித்து தேனியில் பொதுக்கூட்டம்

ஜமாத்துல் உலமா சபை சார்பில் வக்பு திருத்தத் சட்ட மசோதாவை கண்டித்து தேனியில் பொதுக்கூட்டம்

தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பொதுக்கூட்டம் தேனி பங்களா மேட்டில் நடைபெற்றது.

ஜமாத்துல் உலாமா சபை மாவட்ட தலைவர் முஹம்மது ஹனீஃப் தலைமையேற்க, ஜமா த்துல் உலமா தேனி மாவட்ட பொருளாளர் அன்வர் அலி வரவேற்றுப் பேசினார்.

தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொன்ராஜ் கொந்தாளம் முன்னிலை வகித்தார்.

பெரிய குளம் சட்டமன்ற உறுப் பினர் சரவணகுமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ரபீக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

தென்காசி அல்புர்கான் அரபிக் கல்லூரி முதல்வர் ஹாமித் பத்ரி மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img