fbpx
Homeபிற செய்திகள்ஜவஹர் அறிவியல் கல்லூரியில் 449 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் - என்எல்சி தலைவர் வழங்கினார்

ஜவஹர் அறிவியல் கல்லூரியில் 449 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் – என்எல்சி தலைவர் வழங்கினார்

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள ஜவஹர் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தக் கல்லூரி என்எல்சி இந்தியா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஜவஹர் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதன், 12-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர்ஸ்வரூப், எம்.வெங் கடாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

என்எல்சி தலைவரும், ஜவஹர் கல்விக் கழகத்தின் தலைமை புரவலருமான பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 2021 -2022ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த 449 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவை கல்லூரி துணைச் செயலர் ஓ.எஸ்.அறிவு தொடங்கி வைத்தார். ஜவஹர் கல்விக் கழகத்தின் தலைவர் ஐ.எஸ்.ஜாஸ்பர் ரோஸ் வரவேற்றார். கல்லூரிச் செயலர் எஸ்.ராஜ்மோகன் ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் களை வழங்கினர் .பட்ட மளிப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் கிப்ஃட் கிறிஸ்டோபர் தனராஜ் வாசித்தார்.

ஜவஹர் கல்விக் கழகத்தின் துணைத் தலைவர் ராணி அல்லி, ஜவஹர் பள்ளிச் செயலர் பங்கஜ் குமார், துணைச் செயலர் பா.அருளழகன் மற்றும் என்எல்சி உயரதிகாரிகள், ஜவஹர் கல்விக் கழகத்தின் உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஜவஹர் கல்விக் கழக செயலர் டி.வி.எஸ்.என்.மூர்த்தி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img