fbpx
Homeபிற செய்திகள்ராயல் கேர் மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. அங்கீகாரம்

ராயல் கேர் மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. அங்கீகாரம்

சர்வதேச பராமரிப்பு தரங்களை முறையாக கடைபிடிக்கும் சுகாதார நிறு வனங்களுக்கு வழங்கப்படும் ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும் ஜே.சி.ஐ.அங்கீகாரம் கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மதிப்புமிக்க ஜேசிஐ அங்கீகாரத்தைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.
இந்த சாதனை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை பராமரிப்பதிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் உலகளாவிய தரநிலைகளை நிலை நிறுத்துவதில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று என கருதுகிறோம் குறிப்பாக மதிப்புமிக்க இந்த தங்கத் தர அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ் நாட்டின் (சென்னையைத் தவிர) முதல் மருத்துவமனை என்பதில் நிர்வாக இயக் குனர் என்ற முறையில் தாம் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது குவாலிட்டி சர்வீஸ் பிரிவின் துணை தலைவர் மருத்துவர் காந்திராஜன், சர்வதேச தொடர்பு அதிகாரி டாக்டர் மனோகர், மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில் குமார், மார்க்கெட்டிங் பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img