fbpx
Homeபிற செய்திகள்ஏஎம்ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றகேலம் நாலெட்ஜ் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

ஏஎம்ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றகேலம் நாலெட்ஜ் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

சேலம் நாலேஜ் பொறியியல் கல்லூரியில் ஏஎம்ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற நாலெட்ஜ் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாலேட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கல்லூரி முதல்வருமான முனைவர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் மெகாடி ரெண்ட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் துணைத் தலைவராக அமெரிக்காவில் பணிபுரியும் சூசன்ஜேங் 22 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டி பேசினார்.

மேலும் இந்தியாவில் ஏ.எம்.ஐ நிறுவனத்தில் இந்திய கிளையின் துணைத் தலைவராக பணிபுரியும் ரமேஷ் ராஜு, இந்தியாவின் ஏ.எம்.ஐ நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால், இந்தியாவின் ஏ.எம். ஐ நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் சாந்தா, மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமை மேலாளர் செந்தில்குமார், மனிதவள மேம்பாட்டு துறையின் மூத்த ஆலோசகர் அர்ச்சனா மற்றும் மூத்த திட்ட மேலாளர் தன்ராஜ் ஆகியோர் பங்கு பெற்று ஏ.எம்.ஐ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற 22 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினர்.

மாணவர்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து செயல் படுத்திக் கொண்டிருக்கின்ற கல்லூரியின் நிர்வாகத்தை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி பேசினர்.

கல்லூரியின் துணை முதல்வர் கே.விசாகவேல் மற்றும் வேலை வாய்ப்பு துறை இயக்குனர் முனைவர் பி. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

உதவி பேராசிரியர் ஜெகதீஸ் ராஜா வரவேற்புரையாற்றினார், இணை பேராசிரியர் கல்பனா தேவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img