பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி உலக புற்று நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி சார்பாக உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் புற்று நோய் குறித்த பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல் வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
புற்று நோய்களின் வகைகள், அறிகுறிகள், கண்டறியும் முறைகள், தடுக்கும் முறைகள், தேவையான வாழ்வியல் மாற்றங்கள் குறித்த பிரசுரங்கள் வழங்குதல், ஒலி-ஒளி காட்சிகள், மார்பகப் புற்று (அ) கட்டிகளை சுயபரிசோதனையில் அறிதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் உடல் வலிமைத்திறன் உணர்த்தும் சிறு உடற்பயிற்சிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வனத்துறை அலுவலகம் நன்கொடையளித்த மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கருப்பை புற்று நோய்க்கான பரிசோதனை தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கு உதகை பி.எஸ். மருத்துவ மனையில் கட்டணமில்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிக்கைகளும், ஆலோசனையும் வழங்கப்பட்டது.
ஜெ.எஸ்.எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (நிகர்நிலைப் க்கழகம்) மைசூருவின் நிதியுதவி யுடன், இந்தியன் பார்மசூட்டிகல் சங்கம் – நீலகிரி கிளை, ரோட்டரி சங்கம் – நீலகிரி தெற்கு, ரோட்டராக்ட் சங்கம் – ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மற்றும் பி.எஸ். மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
முனைவர் எம் தீபலட்சுமி (துணைப் பேராசிரியர் ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி) விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார்.