fbpx
Homeபிற செய்திகள்15 மாதங்களில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய்: ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் சாதனை

15 மாதங்களில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய்: ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் சாதனை

ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் 15 மாதங்களில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டி சாதனைப் படைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி யானதும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான ஜெஎஸ் டபிள்யூ பெயிண்ட்ஸ் தற்போது 15 மாதங்க ளுக்குள் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் சாத னையை எட்டியுள்ளது. ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் வணிக வளர்ச்சி குறித்து அதன் நிர்வாக இயக்குநர் பார்த் ஜிண்டால் கூறியதாவது:

இந்திய நுகர்வோரின் விருப்பங்களை தீர்த்து வைக்கும் ஆதிக்கமிக்க நிலையில் ஜெஎஸ்டபிள்யூ (JSW) குழும வணிகம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற் றுள்ளது. இதன்மூலம் மிக விரைவாக ரூ.2 ஆயி ரம் கோடி வருவாயை எட்டியது பெருமைக்குரிய தருணமாகும் என்றார்.

ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் இணை நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஏ.எஸ்.சுந்தரேசன் கூறியதாவது: ஒவ்வொரு தயாரிப்புப் பிரிவிலும் சிறந்த தரத்தை வழங்குவதில் எங்களுக்குள்ள உறுதி மிகவும் பாராட்டப்பட்டது.

எந்த நிறத்துக்கும் ஒரே விலை தான் என்பது போன்ற நோக்கங்கள் மூலம் வெளிப் படைத்தன்மையை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம் என்றார்.
ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் தொழில் துறையில் ஆற்றல் மிக்க இளைஞர்கள் குழுவைக் கொண்டு தனது வணிகத்தை சிறப்பாக செயல்படுத்த உறுதிப் பூண் டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img