fbpx
Homeபிற செய்திகள்கோவை, வேலூரில் புதிய கிளைகள்: கல்யாண் ஜுவல்லர்ஸ் நடிகர் பிரபு கணேசன், நடிகை ரெஜினா...

கோவை, வேலூரில் புதிய கிளைகள்: கல்யாண் ஜுவல்லர்ஸ் நடிகர் பிரபு கணேசன், நடிகை ரெஜினா கஸன்ட்ரா திறந்து வைக்கிறார்கள்

இந்தியாவின் முன்னணி ஜுவல்லரி ப்ரான்ட்களில் ஒன்றாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ், தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டு புதிய விற்பனை நிலையங்களை தொடங்க உள்ளது.

இந்த இரு புதிய விற்பனை நிலை யங்களும் கோவை காந்திபுரம் 100 அடி சாலை மற்றும் வேலூரில் உள்ள வூர்ஹிஸ் கல்லூரிக்கு எதிரே உள்ள பார்ட் ஆபிஸர் வீதியிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்த பகுதியில் தனது வர்த்தக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்த விற்பனை நிலை யங்களை துவங்க உள்ளது. கல்யாண் ஜுவல்லரியின் விளம்பர தூதுவர்களான நடிகர் பிரபு கணேசன் மற்றும் நடிகை ரெஜினா கஸன்ட்ரா ஆகியோர் நாளை (29 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை இந்த இரு கிளைகளையும் திறந்து வைக்க உள்ளனர்.

இந்த பிரம்மாண்டமான விற் பனை நிலையங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸின் பிரத்யேகமான நகை தொகுப்புகளில் இருந்து பலவிதமான அசத்தலான டிசைன்களில் நகைகள் இடம்பெற்றுள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த சூழலில் தங்களுக்குப் பிடித்த நகைகளை வாங்கும் ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும். புதிய விற்பனை நிலையங்களின் ஆரம்பத்தை கொண்டாடும் வகையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் இப்பகுதியில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு பல அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது.

புதிய விற்பனை நிலையங்களின் ஆரம்பம் குறித்து கல்யாண் ஜூவல் லர்சின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறும்போது, கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தை பொறுத்தவரையில் நாங்கள் எங்க ளது சந்தை செயல்பாடுகளைமேலும் வலுப்படுத்துவதிலும் வாடிக் கையா ளர்கள் சவுரியமான முறையில் நகைகள் வாங்கும் அனுபவத்தையும் உல கத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனு பவத்துடன் நகைகளை எளிதில் வாங் கும் வாய்ப்புகளை வழங்குவதில் பெருமையுடனும் அக்கறையுடனும் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் திருச்சூரை தலைமை இடமாகக் கொண்டு மத்திய ஆசியா வரை பரவலாக செயல்பாடுகளை கொண்டிருக்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது வர்த்தகத்தை நீடித்து நிலைக்கச் செய்து வருகிறது. தரம், வெளிப்படை தன்மை, புதுமை, விலை நிர்ணயம் ஆகியவற்றை தனது தனித்துவம் மிக்க அடையாளங் களாகக் கொண்டு செயல்படுகின்றது.

தங்கம், வைரம், விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றை கொண்டு பாரம்பரியமும், நவீன தன்மையும் கொண்ட வேலைபாடுகளுடன் நகைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளில் பூர்த்தி செய்து வருகிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 210க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img