fbpx
Homeபிற செய்திகள்கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்த கனிமொழி எம்.பி

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை வளாகத்தில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழவில் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில், திமுக துணைப் பொதுச் செயலா ளரும், நாடாளுமன்ற குழுத் தலை வருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது:

இந்த பகுதியின் மக்களுக்கு பல நாளாக இருந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 348.950 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 327.579 கி.மீ, மாவட்ட இதர சாலை 1540.340 கி.மீ என ஆக மொத்தம் 2216.869 கி.மீ நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. நிர்வாக காரணங்களுக்காகவும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டத்திலிருந்து புதிதாக கோவில்பட்டி நெடுஞ்சாலை கோட்டம் தோற்றுவிக்கப் படுமென சட்டமன்றப் பேரவை யில் அறிவித்து அரசாணை வெளி யிடப்பட்டது.
அந்த அரசாணையின் அடிப்ப டையில், தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலை 228.880 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 89.835 கி.மீ, மாவட்ட இதர சாலை 773.228 கி.மீ என ஆக மொத்தம் 1091.943 கி.மீ நீள சாலைகள் பிரிக்கப்பட்டு 01–&04-&2025 அன்று கோவில்பட்டி நெடுஞ்சாலை கோட்டம் தோற்றுவிக்கப்பட்டது.

நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் அதிகம் உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளைப் பராமரிப் பதற்கு ஏதுவாக இரண்டு கோட்டங்களாகப் பிரிப்ப தற்கு மக்கள் கோரிக்கைகள் வைத் துக்கொண்டிருந்த நிலையில், நமது தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்களும் நமக்காக இதனை செய்துகொடுத் துள்ளார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க் கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கண்காணிப்புப் பொறியாளர் (நெ) க(ம)ப திருநெல்வேலி த.ஜெயராணி, கோவில்பட்டி வருவாய் கோட் டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img