fbpx
Homeபிற செய்திகள்கனிமொழி எம்.பி. பங்கேற்கும் கருத்தரங்கு: கோவையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

கனிமொழி எம்.பி. பங்கேற்கும் கருத்தரங்கு: கோவையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி., கோவையில் நடைபெறும் மகளிரணி கருத்தரங்கில் பங்கேற்பது தொடர்பாக, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், தலைவர்கள்,துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில், திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலா ளர் நாமக்கல் ராணி தலைமை தாங்கினார்.

கழக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மாலதி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி, மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, மாநகர் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சி.ஆர்.கனிமொழி, வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப் பாளர் டி.வி.ரங்கநாயகி, தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவிதா மற்றும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img