காளிப்பட்டி மகேந்த்ரா இண்டர் நேஷனல் பள்ளியில் கெனி மாபூனி ஷிட்டோ ரியூ கராத்தே ஸ்கூல் ஆஃப் இந்தியாவின் சார்பில் அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கராத்தே பேராசிரியர் பி ஆர் ரமேஷ் தலைமையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 350 மாணவ மாணவிகளுக்கு கராத்தே தகுதிப்பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், சுதா, கராத்தே ஆசிரியர்கள் பிரசாந்த் ,மோகன சுந்தரம், செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.