fbpx
Homeபிற செய்திகள்பெற்றோருக்கு நல்ல பிள்ளை, கல்லூரிக்கு சிறந்த மாணவியாக வெற்றி பெற வேண்டும்

பெற்றோருக்கு நல்ல பிள்ளை, கல்லூரிக்கு சிறந்த மாணவியாக வெற்றி பெற வேண்டும்

கரூரை அடுத்த புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும்அன்னை அரபிந்தோ மகளிர் கல்லூரியில் பயின்ற மாணவிகள் பாரதிதாசன்பல் கலை அளவில் தரவரிசையில் 48 பேர் முன்னிலை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து முன்னிலை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி யில் கூட்டரங்கில் கல்லூரியின் தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சாருமதி, கல்லூரியின் நிறுவனரும், முன்னாள் எம்எல்ஏவான மலையைப் பசாமி, செயலாளர் முத் துக்குமார், பொருளாளர் கந்தசாமி, உள்ளிட்ட கல்லூரியின் இருபால் பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2021-23ம் கல்வியாண்டில் தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்ற 48- மாணவிகளை மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பாராட்டை ஏற்றுக் கொண்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

அப்போது, சிறப்புரையாற்றிய கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன மலையப் பசாமி, பெற்றோருக்கு நல்ல பிள்ளையாகவும், கல்லூரிக்கு சிறந்த மாணவியாகவும் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img