மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் மாநகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளார்கள்.
குப்புச்சிபாளையம் ஊராட் சிக்கு ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம செயலக கட்டடத்தையும், கரூர் மாநகராட்சி மண்டலம்-1 வார்டு 10. என்.எஸ்.கே நகர்பகுதியில் ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத் தையும், மோகனூர் -வாங்கல் சாலை முதல் காமதேனு நகர் வழியாக சேலம் பழைய நெடுஞ்சாலை வரை ரூ.13.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக போடப்பட்ட இணைப்பு சாலையையும், மண்டலம்-3, 13-வது வார்டு சணப்பிரட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார மையத் தையும், மண்டலம்-2, 34-வது வார்டு காமராஜ் சாலையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் திறந்து வைத்தார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்- 4. வார்டு எண்.36 திரு மாநிலையூர் புதிய பாலம் அருகே ரூ.36.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பிடத்தினையும், 48-வது வார்டு காளியப்பனூர் பகுதியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன் வாடி மையத்தினையும், ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி ஜீவா நகரில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகத்தினையும், மொச் சக்கொட்டாம்பாளையம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியினையும், வேப்பம்பாளையம் காலனி பகுதியில் ரூ.28.74 லட்சம் மதிப்பீட் டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தினையும் என மொத்தம் ரூ.14.97 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும், கரூர் மாநகராட் சிக்குட்பட்ட மண்டலம்-3, 42-வது வார்டுக்குட்பட்ட தென்றல் நகரில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப் பணியையும், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி, கோவிந்தம்பாளையம் ரூபி கார்டனில் ரூ.4.50 லட் சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கழிவுநீர் வடி கால் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி, குடித்தெரு மயா னத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர், எரிமேடை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி களையும் என மொத்தம் ரூ.15.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன். சட் டமன்ற உறுப்பினர்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆர். இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாந கராட்சி ஆணையாளர் சுதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் மரு.சுரேஸ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சரவணன், கரூர் வருவாய் கோட் டாட்சியர் முகமதுபைசல், துணை காவல் கண்காணிப்பாளர் செல்வ ராஜ், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா. திரு.சக்திவேல், அன்பரசன், தாந்தோணி ஊரா ட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சிவ காமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.