fbpx
Homeபிற செய்திகள்தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள்

தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் செயல்பட்டு வரும் விதைகள் அறக்கட்டளை மூலமாக வயலூர், தேவசிங்கம்பட்டி, மேட்டுப்பட்டி வேங்காம்பட்டி மற்றும் தாளியாம்பட்டி ஆகிய கிராமத்தில் ஏழு மாலை நேர வகுப்பு மையங்கள் இந்த கல்வியாண்டில் Tata Solar Power நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.

தற்சமயம் மாணவர்களின் கல்வி சுற்றுலாவாக திருச்சி இரயில்வே அருங்காட்சியகம் மற் றும் முக்கொம்பு கதவணை ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு வாகனம் மூலம் மாணவர்களை நேற்று அழைத்து சென்றனர்.

இந்த பயணம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது என பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு, இயக்குனர் ஜெயந்தி, அறக்கட்டளையின் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் மைய ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img