fbpx
Homeபிற செய்திகள்கதிர் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புற்றுநோய் விழிப்புணர்வு

கதிர் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புற்றுநோய் விழிப்புணர்வு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக புற்று நோய் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக K.G.M. மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர்.சரண்யா கலந்து கொண்டார்.

புற்று நோய்க்கான அறிகுறிகள் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் நாம் எடுக்க வேண்டிய உணவு முறைகள் மற்றும் உடற் பயிற்சிகள் குறித்து சிறப் புரையாற்றினார்.
குடும்ப உறுப்பினர்கள் எவருக்கேனும் இதற்கு முன்பு புற்றுநோய் இருந்திருந்தால் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

மேலும் ஆண்டுதோறும் முழுஉடல் பரிசோதனை செய்வதன் அவசியத்தையும்
விளக்கினார். இந்நிகழ்வினை கல்லூரி முதல்வர் முனைவர் கற் பகம் துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வினோதினி ஏற்பாடு செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img