மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் சென்னை காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 76 வயதான ஒரு முதிய நோயாளிக்கு இரு மருத்துவ செயல்முறைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டதன் வழியாக மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் முதுநிலை இடையீட்டு இதயவியல் நிபுணர் டாக்டர். அனந்தராமன் கூறியதாவது: ஆசிரியராகவும், விவசாயியாகவும் முன்பு பணியாற்றிய இவருக்கு 2013-ம் ஆண்டில் பயோப்ரோஸ்தெடிக் வால்வு வழியாக மிட்ரல் தடுக்கிதழ் மாற்றுச்சிகிச்சை இந்நோயாளிக்கு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்கோ சோதனை, அந்த செயற்கை வால்வு சிதைவடைந்திருப்பதையும், கடுமையாக குறுகியிருப்பதையும் வெளிப்படுத்தியது. அத்துடன், வலது இதயத்தில் மிக அதிக (கடு¬ மயான நுரையீரல் மிகை இரத்தஅழுத்தம்) என்ற பிரச்சனையும் இவருக்கு இருந்தது. இந்த வால்வை மாற்றுவதற்காக இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்வது, இவரது முதுமை மற்றும் உடல்நிலையின் காரணமாக அதிக ஆபத்தானதாக இருந்ததால், அறுவை சிகிச்சையின்றி டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் ViV மாற்று சிகிச்சையை நவம்பர் மாத இறுதியில் செய்ய திட்டமிடப்பட் டிருந்தது.
எனினும், எதிர்பாராத விதமாக வீட்டில் கீழே விழுந்ததனால், இடது காலில் தொடை எலும்பின் கழுத்துப் பகுதியில் (உடைந்த இடுப்பெலும்பு) எலும்பு முறிவு ஏற்பட்டது இவரது நிலையை சிக்கலாக்கியது.
இவரது இடுப்பெலும்பு முறிவுக்கும் இதய பாதிப்பின் ஆபத்தான நிலைக்கும் தீர்வு காண்பது பெரிய சவாலை ஏற்படுத்தியது. பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகின்ற ஒரு அதிக ஆபத்தான மருத்துவ செயல்முறையாக இவை இருந்தது. இடுப்பெலும்பு மற்றும் இதயம் சார்ந்த இரு மருத்துவ செயல் முறைகளையும் ஒரே பொது மயக்க மருந்து (அனஸ்தீசியா) வழங்கலின் கீழ் மேற்கொள்வதே ஒரே பாதுகாப்பான வழியாக இருந்தது.
ஹைபிரிட் (கலவை), கேத்லேப் அறுவைசிகிச்சை அறையில் முதலில் டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் ViV செயல்முறையையும் மற்றும் அதைத் தொடர்ந்து இடதுபுற முழு இடுப்பெலும்பு மாற்று சிகிச்சையையும் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அறை, இதய மற்றும் எலும்பியல் சிகிச்சையில் சிறந்த நிபுணத்துவம் இம்மருத்துவமனையில் இருப்பதால், இம்முதிய நோயாளிக்கு இம்மருத்துவ செயல்முறைகள் பாதுகாப்பாக செய்யப்பட்டன.
இச்சிகிச்சைகள் முடிவ டைந்து, 36 மணி நேரங்களுக்குள் இவர் இயல்புநிலைக்கு திரும்பினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனையின் எலும்பியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் முகுந்த், காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செய லாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோரும் மருத்துவமனையின் சாதனையை விரிவாக எடுத்துரைத்தனர்.