உலக இதய தினத்தை நினைவுகூரும் வகையில், காவேரி மருத்துவமனை வடபழனியில் அதிநவீன வசதிகளை கொண்ட காவேரி ஹார்ட் இன்ஸ்டிடி யூட்டை தொடங்கியுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
வடபழனி காவேரி மருத்துவமனையின் இதயநோய் நிபுணரும் இதயநோய் மருத்துவ மூத்த ஆலோசகருமான ஜோதிர்மயா தாஷ், வடபழனி காவேரி மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் இருதய நோய் நிபுணருமான டாக்டர் வி. மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் திறமையான இருதய நிபுணர்களின் வழிகாட்டுதல் குழுவோடு இயங்கும். சர்வதேச தரத்தில் மிக உயர்வான மற்றும் விரிவான இருதய சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக இது கொண் டுள்ளது.
இந்த நிறுவனம் இதயம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல், மற்றும் தடுப்பதற்கான மையமாகச் செயல்படும். நிபுணர்கள் குழுவிடமிருந்து நோயாளிகள் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை இந்த மையம் உறுதி செய்யும்.
இந்நிறுவனத்தில் மேம்பட்ட இருதய MRI மற்றும் CT ஸ்கேனர்கள் உட்பட சமீபத்திய கண்டறியும் கருவிகள் பொருத் தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் குணமடையவும் இதய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் ஒரு விரிவான இருதய மறுவாழ்வுத் திட்டத்தை இந்த மையம் கொண்டுள்ளது.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், அனைவருக்கும் உயர்தரமான மருத்துவ சேவையை வழங்கவேண்டும் என்ற எங்களது நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான் ‘காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்’ தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
தடுப்பு மற்றும் ஆரம்பகால நோயறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, இம் மருத்துவமனை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை ECG, ECHO மற்றும் மருத்துவர் ஆலோசனையை உள்ளடக்கிய இலவச இருதய சிகிச்சை முகாமையும் நடத்துகிறது.