fbpx
Homeபிற செய்திகள்காவேரி மருத்துவமனையில் சாவித்துளை முறையில் சிகிச்சை செய்து சாதனை

காவேரி மருத்துவமனையில் சாவித்துளை முறையில் சிகிச்சை செய்து சாதனை

வடபழனி காவேரி மருத்துவமனை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கநாதன் ஜோதியின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ் சூடான் நாட்டைச் சேர்ந்த 69 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை சாவித்துளை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்சஸில் உள்ள மருத்துவக் குழுவினர், மிக நுணுக்கமான மற்றும் துல்லியமான விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்காக சாவித்துளை என்ற (சூப்ராஆர்பிட்டல் கிரானியோடமி) மிகக் குறைவான ஊடுருவல் செயல் முறையை மேற் கொண்டது.

புருவத்தையொட்டி ஒரு சிறிய கீறலை செய்து அதன் மூலம் மண்டைக்குள் இருந்த கட்டி மென்மையாக அகற்றப்பட்டது.

கிரானியோடமி என்ற மூளையை அணுகுவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதி தற்காலிகமாக அகற்றப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறை யாகும்.
மூளையின் சிக்கலான உடற்கூறியல் மற்றும் முக்கியமான செயல் பாடுகள் காரணமாக இத்த கைய அறுவை சிகிச்சை இயல்பாகவே அதிக சிக்கலானது.

ஆனால் இந்த பெண் மணிக்கான சிகிச்சையில் மிகக்குறைந்த ஊடுருவல் தன்மையின் காரணமாக கணிசமான பலன்களை வழங்கும் விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக் கான சாவித்துளை அறுவைசிகிச்சை முறை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img