கோத்தகிரி செயின்ட் ஜுட்ஸ் பப்ளிக் பள்ளியானது சர்வதேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுள்ளது. இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட இந்தியாவின் முதல் பள்ளி இதுவே ஆகும்.
இதன் மூலம் உலக அரங்கில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், மற்றும் தொழில்நுட்ப வளர்ச் சிக்கு ஏற்ப இங்கு பயிலும் மாணவர்களின் சிந்தனைத்திறன், படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் போன்றவற்றில் சிறந்து விளங்க மாணவர்களைத் தயார் படுத்துகிறது.
சர்வதேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப் பின் திட்டங்களை பள்ளிக் கல்வியுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலம் இங்கு பயிலும் மாணவர்களை வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி யில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ளவும், அவற்றில் எழும் சிக்கல்களைத் தீர்க்கவும் தயார் படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட சர்வதேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் பிலிப் தாமஸ் கூறுகையில், எங்களது திட்டத்தில் இணைந்ததன் மூலம் செயின்ட் ஜுட்ஸ் பப்ளிக் பள்ளியானது கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,
என்றார்.
இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாம் ஜோசப் பேசு கையில், சர்வதேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பு மற்றும் செயின்ட் ஜுட்ஸ் பப்ளிக் பள்ளிக்கும் இடையிலான ஒப்பந்தமானது உலகளாவிய படைப்பாற்றல் திறன்களை ஒருங் கிணைப்பதில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது,
என்றார்.
பள்ளியின் முதல்வர் டாக்டர் சரோ தன்ராஜன், நிர்வாக இயக்குநர் சம்ஜித் தன்ராஜன் ஆகி யோரும் ஒப்பந்தத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பிலிப் தாமஸ், கல்வியில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை புகுத்துவதில் பள்ளியின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பின் கற்றல் கூட்டாளர் சான்றிதழை பள்ளியின் நிர்வாக இயக்குநர் சம்ஜித் தன் ராஜனிடம் வழங்கினார்.
விழாவில் ஆப்டர்நூன் ஆங்கில நாளிதழ் மற்றும் பிற்பகல் தமிழ் நாளிதழ் ஆகியவற்றின் இயக்குநர் ஆடம் அப்பாதுரை, சர்வதேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பின் சீனியர் மேலாளர் (பார்ட்னர்ஷிப்ஸ்) பிரான்சிஸ் உள்ளிட்டோர் பங்கேற் றனர். ஐ.எஸ்.டி.சி என்பது (சர்வ தேச படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பு) பிரிட்டீஷ் கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கான சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது. 300க்கும் மேற்பட்ட முன்னணிபல் கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப்படிப்புடன் கூடிய எதிர் காலத்திற்கான திறன் மேம்பாட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
ஐ.எஸ்.டி.சி. அமைப்பானது ஸ்குவாட்டிஷ் தகுதி ஆணையகம் மற்றும் பிரிட்டனில் உள்ள 25க்கும் மேற்பட்ட உயர்கல்வி, தொழில் முறை அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச அளவில் கல்வி மற்றும் வளர்ச்சிக்கான பணிகளைச்செய்து வருகின்றது. இந்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி போன்ற பாடத்திட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுடன் இணைந்து பணி யாற்றுவதன் மூலம் எங்க ளது திட்டத்தின் தாக்கத்தை மேம்படுத்துவதில் ஐ.எஸ்.டி.சி அமைப்பானது முக்கிய பங்காற்றி வருகிறது. டபிள்யு. டி.சி என்பது ஒரு உலகலாவிய லாப நோக்கமற்ற அமைப்பாகும். இந்த அமைப்பானது பல்வேறு வடி வமைப்பு வல்லுநர்களையும், கல்வி யாளர்களையும், சிறந்த கண்டுபி டிப்பாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.