fbpx
Homeபிற செய்திகள்‘பணத்தின் மொழி’: ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கோடக் மியூச்சுவல் பண்ட் நடத்தியது

‘பணத்தின் மொழி’: ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கோடக் மியூச்சுவல் பண்ட் நடத்தியது

முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக கோடக் மியூச்சுவல் பண்ட், சேலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு ‘பணத்தின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துடன் இணைந்து நடத்தியது.

முதலீடு மற்றும் நிதி சம்பந்தமான பல்வேறு விஷயங்களை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை கோடக் மியூச்சுவல் பண்ட் நடத்தியது. இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் உள்ள 5175-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கும், சேலத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் நிதி சம்பந்தமான அறிவுப்பூர்வமான விஷயங்கள் குறித்தும், அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெய்வின்ஸ் அகாடமி (அம்மன் நகர் ஆத்தூர் சேலம்), முதல்வர், கிறிஸ்டோபெல் ஜெர்மி கூறுகையில், நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளோம். ஏனெனில், நிதி நிர்வாகம் குறித்து தெரிந்து கொண்டு அதன் மூலம் ஆசிரியர்களுக்கு உதவுவதே முதன்மையான குறிக்கோள் ஆகும்.

பொறுப்பாக பணத்தை கையாள்வதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், நிதிசார்ந்த புத்திசாலித்தனமான முடிவுகளை அவர்களால் எடுக்க முடியும் என்றார்.

கோடக் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் பிசினஸ், மார்க்கெட்டிங் மற்றும் அனலிட்டிக்ஸ் தலைவர் கிஞ்சல் ஷா கூறுகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘சீகோ பைசோ கி பாஷா’ மூலம், நிதி ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதிலும், புதிய தலைமுறையை உருவாக்குவதிலும் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img