கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், பதவியேற்பு விழா நடைபெற்றது.
கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் மனநலம் மற்றும் மன மகிழ் மன்ற அலுவலர்களின் நான்காவது பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கிளினிக்கல் சைகாலஜிஸ்ட் மற்றும் காக்னிட்டோ அகாடமி நிறுவனர் லக்ஷ்மணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர் மணிஷ், மன்றத்தின் புதிய தலைவர் ஆக பதவியேற்றார்.
அவருடன் புதிய நிர்வாக குழுவினரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதில் கல்லூரியின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், முதல்வர் டாக்டர் சரவணன் மற்றும் அனைத்து துறை மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களின் மனநல மேம்பாட்டிற்கான இந்த முயற்சிக்கு தங்க ளது முழு ஆதரவை தெரிவித்தனர்.
மாணவர்களின் மனநலத்தை உறுதிப்படுத்தவும், அவர்களிடையே மகிழ்ச்சியையும் மனநிலைத்தன்மையையும் வளர்ப்பதற்காக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்படுகிறது.