fbpx
Homeபிற செய்திகள்கிரிஷ் டொயோட்டாவின் புதிய ஷோரூம் கோவையில் துவக்கம்

கிரிஷ் டொயோட்டாவின் புதிய ஷோரூம் கோவையில் துவக்கம்

டொயோட்டா கார் தொடர்பான அனைத்து வசதிகளும் கொண்ட புதிய கிரிஷ் டொயோட்டா கோவை திருச்சி சாலையில் துவங்கப்பட்டது.
ஒரு ஏக்கர் பரப்பளவில் கரூரை சேர்ந்த கே.ஆர். குழுமம் சார்பாக துவங் கப்பட்டுள்ள இதற் கான துவக்க விழா கே.ஆர்.குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அவரது தாயார் லட்சுமி அம்மாள் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராமகிருஷ்ணன், கிரிஷ் டொயோட்டா வின் நிர்வாக இயக்குனர் வசுதா ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பேசினர்.
ஏற்கனவே கோவையில் டொயோட்டா ஷோரூம் கள் இருந்தாலும் வாடிக் கையாளர்கள் நலன் கருதி டொயோட்டா எங் கள் நிறுவனத்திற்கும் வாய்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img