fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு, மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை கிருஷ்ணகிரியில் நடந்தது. கூட்டத்திற்கு கிருஷண்கிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் ராஜா, மேற்கு மாவட்ட அமைப்பாளர் திம்மராயப்பன், தர்மபுரி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சட்டத்துறை இணைச் செயலாளர் தாமரைச் செல்வன், சட்டத்துறை துணைச் செயலாளர் மருது கணேஷ் ஆகியோர் பஙகேற்று ஆலோசனை வழங்கி பேசினர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ., தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி சென்னையில் திமுக., சட்டத்துறையின் சார்பில் நடக்கும் 3வது மாநில மாநாட்டில் கிருஷ்ணகிரி, கிழக்கு, மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பில், 500 வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நமது இந்தியா கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்களில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற அயராது பாடுபட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. திமுக., சட்டத்துறையில் உறுப்பினர்களாக சேர இளம் வழக்கறிஞர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அவர்களை கண்டறிந்து வழக்கறிஞர் அணியில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணியை தீவிரமாக செய்ய வேண்டும். அரூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும். போச்சம்பள்ளியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் சேமநல நிதியினை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. 2026ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில், 200 இடங்களில் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக தேர்தல் பணியாற்றி, 7வது முறையாக கழகம் வெற்றி பெற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்கிட வழக்கறிஞர் அணி அயராது பாடுபடும். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில் ஓய்வு அறையினை அமைத்து தர வேண்டும்.

சூளகிரியில் நீதிமன்றம் அமைக்க அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. எனவே தமிழக அரசு விரைவாக நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img