இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான நெட்வொர்க் 18, ஓலா எலக்ட்ரிக் உடன் இணைந்து நடத்தும் வருடாந்திர மாநாடான கிரீன் பாரத்தின் தொடக்கப் பதிப்பை நிறைவு செய்தது.
இந்நிகழ்வு, இந்தியாவின் நிலையான இயக்கத்தின் மாற்றத்திற்கான விளக்கத்தை சமாளித்து வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது.
இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் காட்காரி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நிதின் கட்காரி பேசுகையில், “அடுத்த ஐந்து ஆண்டு களுக்குள் இந்தியா மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி மையமாக மாறும்“ என்றார்.
தொடர்ந்து பியூஷ் கோயல் பேசுகையில், “மிஷன் லைஃப் மற்றும் பசுமை ஆற்றலில் கூட்டு கவனம் செலுத்துவதன் மூலம், நாங்கள் தூய்மையான, பசுமையான மற்றும் அதிக தன் னம்பிக்கை கொண்ட எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம்“ என்றார்.
இந்நிகழ்வின் வெற்றி குறித்து, நெட்வொர்க் 18 (ஒளிபரப்பு) தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் கவுல் கூறுகையில், “இந்த உச்சிமாநாடு, பசுமை இயக்கம் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது” என்றார்.