கோயம்புத்தூரில் உள்ள அவினாசிலிங்கம் மக ளிர் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் நூலகம், சமீபத்தில் நிம் பஸ் என்ற மின் நூலக தளத்திற்கான தொடக்க மற்றும் பயிற்சித் வகுப்பை ஏற்பாடு செய்தது.
இது பயனர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நூலக வளங் களை அணுக உதவுகிறது.
இந்நிகழ்வை நிறுவனத் தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தொடங்கி வைத்தார். கல்வித் திறன் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை மேம்படுத்துவதில் நூலகங்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்நிகழ்ச்சி யில் ஆசிரிய உறுப்பினர் கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இணை இயக்குநர் கே.கார்த்திகே யன் தலைமையிலான நிம்பஸ் குழு, மதிப் புமிக்க பயிற்சி அமர்வு களை வழங்கியது. பங் கேற்பாளர்கள் தங்கள் கற்றல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தை மேம்படுத்த தளத்தின் அம்சங்களை எவ்வாறு அதிகப்படுத் துவது என்பது குறித்து வழிகாட்டப்பட்டது.