fbpx
Homeபிற செய்திகள்வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த 70 லட்சம் ரூபாய் நிதியுதவி டாக்டர் லீமா ரோஸ்...

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த 70 லட்சம் ரூபாய் நிதியுதவி டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தாராளம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வுக்கூடங்களை மேம்படுத்துவதற்காக மார்ட்டின்
அறக்கட்டளை மூலம் 70 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிய நிலையில் மார்ட்டின் அறக்கட்டளையின் இச்சேவையை பாராட்டும் வகையில் நேற்று பள்ளி வளாகத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மார்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மார்ட்டின் அறக்கட்டளையின் இந்த சேவைக்காக டாக்டர் லீமா ரோஸ் மார்டினுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர் & ஆசிரியைகள், பெற்றோர், மாணவர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img