fbpx
Homeபிற செய்திகள்காவேரி கூக்குரல் இயக்க சாதனைகள் தொடரட்டும்!

காவேரி கூக்குரல் இயக்க சாதனைகள் தொடரட்டும்!

காவேரி கூக்குரல் இயக்கம், சத்குருவால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதையாகும். 1998ஆம் ஆண்டு முதல் ஈஷா பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை வெவ்வேறு பெயர்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறது.

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் இந்தாண்டு 1.21 லட்சம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் முதல் கன்றை நட்டு வைத்து தொடங்கி வைத்துள்ளார்.

உலகிலேயே வேறு எந்த சுற்றுச்சூழல் இயக்கமும் செய்யாத மாபெரும் சாதனையை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது. விவசாய நிலங்களில் ஓராண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் இலக்கை தொடர்ந்து 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நிறைவு செய்ததோடு, இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் 1.21 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்து பணியை தொடங்கி இருக்கிறது.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற சாதனை நிகழ்த்தப்பட்டது இல்லை. இத்திட்டத்தின் மூலமாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஆலோசனைப்படி, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக 130 களப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றனர். அவர்கள் விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது உலகம் பருவநிலை மாற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மரக்கன்றுகள் நடுவது தான் சிறந்த தீர்வாகும்.

அந்த வகையில், விவசாய நிலங்களில் மரம் நடும் இந்த அற்புதமான திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மரம் நடும் பணியில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் தமிழ்நாடு வனத்துறையும் தங்கள் பங்களிப்பை கூடுதலாக நல்க வேண்டும்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் சாதனை பயணம் தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img