fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கான மின்னல் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கான மின்னல் விழா

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கான மின்னல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அவர்களை அங்கீகரித்து மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.பிரேமசுதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்திப் பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கினார் தொடர்ந்தவர் கூறியதாவது:

எங்கள் கல்லூரியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மின்னல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவிகள் சமூகப் பொறுப்புமிக்கவர்களாக உருவாவதோடு, சக மனிதர்களின் நிலைமையை உணரும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக் கோளாகக் கொண்டு எங்கள் கல்லூரியில் மின்னல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img