கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையின் சார்பில் கலை, இலக்கியப் பண்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பங்களிப்புக் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் துருக்கியைச் சேர்ந்த மலட்யா டுர்கட் ஒஸால் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மொழிகளுக் கான துறைத்தலைவர் முனைவர் அகமத் செலுக், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்புத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் க.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் அகமத் செலுக் கலை, இலக்கிய வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரும் வரம் என்றார். திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் க.மாரியப்பன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்கியத் துறைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய லாம் என்றார்.
முன்னதாகக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா தொழில்நுட்பத்தை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதால் மனிதர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையலாம் என்றார்.
கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் ஒப்பாய்வுத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.உதயகுமார் மற்றும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சோபியா ஆசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.