ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்புக்குழு மற்றும் ஆதிவனம் அறக்கட்டளை சார்பில் ஈரோடு ஏஈடி பள்ளியில் கால்நடை கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் சுமார் 400 நாட்டு மாடுகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் பங்கேற் றன. பள்ளித் தாளாளர் மற்றும் நாட்டு மாடுகள் பாதுகாப்புக்குழு தலைவர் மோகன், ஆதிவனம் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ரகுநாதன் நிகழ்ச் சியை ஏற்பாடு செய்தனர்.
இக்கண்காட்சியை திருச்செங்கோடு எம்எல்ஏ மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். தமிழக விவசாயிகள் சங்கத் மாவட்ட தலைவர் பெரியசாமி மற்றும் சிவ சேனாதிபதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விவசாயிகள் பொதுமக்கள் நாட்டு மாடுகளை பாதுகாக்கவும் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கண்காட்சி கடந்த 12 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.